பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களையும் செய்தி தளங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள மத்திய அரசு அமேசான் பிரைம் நெட்விளிக்ட்ஸ் போன்ற தளங்களுக்கும் தணிக்கை விதிகள் பொருந்தும் என்று அறிவித்திருக்கிறது.
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி நெட்விளிக்ட்ஸ் அமேசன் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்கிமின் தளங்கள் தற்போது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் செயல்படும். OTT தளங்கள் மட்டுமின்றி பேஸ்புக், ட்விட்டர் ஆன்லைன் நியூஸ் தளங்கள் போன்றவையும் மத்திய அரசின் கண்காணிப்பின்கீழ் வந்துள்ளது. இதனால் இதில் வெளியாகும் நிகழ்ச்சிகள் செய்திகள் அரசின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் இந்த தளங்கள் செயல்படும்.
ஆனால் இதில் வரும் நிகழ்ச்சிகள் சென்சார் செய்யப்படுமா என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. OTT தளங்களுக்கு எதிராக அவ்வப்போது புகார்கள் வந்தது. இதில் வெளியாகும் தொடர்களுக்கு எதிராக அவ்வப்போது சிலர் குரல் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மொத்தமாக மத்திய அரசின் கண்காணிப்பின்கீழ் இந்த தளங்கள் வந்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான ஒப்புதல் அளித்துள்ளார்.