Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை விமனநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோரின் பெயரில் கடிதம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  அந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம்  அய்யம் பேட்டையை சேர்ந்த மோகன் என்பவர்  எழுதியது  தெரியவந்தது  இதையடுத்து அவரை  போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தியதில் தனது எதிரிகளை சிக்க வைப்பதற்காகஇந்த கடிதம் எழுதியதாக  முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது, 

Categories

Tech |