ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் என்ற பகுதியில் நேற்று கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்தக் கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்டதால், கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காண்ட்ராக்டர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.