உத்திரமேரூர் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த கண்டிகை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை,அந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி எனும் பெண், 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் குடும்பத்தார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரை விசாரித்ததில் , பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த, வசந்த், பிரகாஷ் முத்துகல்யாணி, மஞ்சுளா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்
இந்நிலையில் இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த வேளாங்கண்ணியின் கள்ளக்காதலன் அற்புதராஜ் என்பவரை காஞ்சிபுரம் செவிலிமேடு என்ற பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் மூன்று பேர் குறித்து போலீசார், தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.