Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை ஏன் திறக்கவில்லை?… நீங்க திறக்குறிகளா இல்ல நாங்க திறக்கட்டுமா…உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தில் பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை திறக்கப்படாது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இருந்தாலும் தற்போது வரை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை நீக்கப்படவில்லை. அதனால் கட்டுப்பாடுகளுடன் மெரினா கடற்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது பற்றி பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

அந்த விசாரணையில் நவம்பர் மாதம் இறுதி வரையில் மெரினா கடற்கரை திறக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையை திறப்பதற்கு தாமதம் காட்டுவது ஏன்? அதில் என்ன சிரமம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமன்றி இதுபற்றிய அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடவில்லை என்றால் நீதிமன்றமே மக்களுக்கு அனுமதி வழங்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |