3 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமி அவரது வீடு இருந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அவ்விடத்திற்கு வந்த 12 வயது சிறுவன் செல்போனில் கேம் விளையாடலாம் என சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளான். சிறுமியும் சிறுவனை நம்பி சென்றுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து 3 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அதன் பிறகு அவன் தப்பி ஓட சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனைத் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் நேரடியாக அவனது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.