கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிசியோதெரபி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி. இவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி வல்லுநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். சமீபத்தில் கொரோனா தொற்றால் சின்னுசாமி பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் செட்டியப்பட்டி அருகே அமைந்துள்ள ரெயில்வே கேட்டிற்கு சென்ற அவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு நெல்லை நோக்கி சென்ற ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சின்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.