வேல் யாத்திரை வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவை கடுமையாக கண்டித்துள்ளது.
100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தமிழக பாஜக வழக்கு தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல் பல திட்ட மிட்டு நடத்திக் கொண்டிருக்கின்ற வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், எத்தனை பேர் கலந்து கொள்ள போகிறார்கள், எத்தனை வாகனங்கள் செல்ல போகிறது என்ற அறிக்கை தாக்கல் செய்யவும் , அது தொடர்பாக டிஜிபியிடம் மனு அளிக்கவும் பாஜகவுக்கு உத்தரவிட்டு இருந்தார்கள்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக டிஜிபி தரப்பில் ஒரு அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் என்னென்னெ விவரங்கள் அடங்கி இருக்கின்றன என நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனிடம் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்க்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் அளித்த விளக்கத்தில், கடந்த ஆறாம், எட்டாம் தேதி, ஒன்பதாம் தேதிகளில் தமிழக பாஜக தரப்பில் தடையை மீறி கோயில்களுக்கு யாத்திரை சென்றதாகவும், இது தொடர்பாக பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நாலாயிரம் பேருக்கு மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன், பாஜகவின் மூத்த தலைவர்கள் சி,பி ராதாகிருஷ்ணன், பாஜக துணைத் தலைவராக இருக்கக் கூடிய அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், வேல் யாத்திரையில் தனிமனித இடைவெளியை இவர்கள் மட்டுமல்லாமல், இவர்கள் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் கூட முறையாக கடைபிடிக்கவில்லை. ஒருவருக்கு ஒருவர் முகக்கவசம் அணிய வில்லை என்ற தகவலை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இது கோயிலுக்குச் செல்லக் கூடிய யாத்திரை என்று அறிவித்திருந்தாலும், இது கோவில் யாத்திரையாக தெரியவில்லை. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையாகத்தான் நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. மத்தியில் ஆளுகின்ற ஒரு ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய பாஜக சட்டத்தை பின்பற்றாமல் இது போன்று நடந்து கொண்டிருப்பதாகவும், கொரோனா காலத்தில் மத்திய அரசு சொல்லி இருக்க கூடிய விதிமுறைகளை அதை சார்ந்த தமிழக அளவிலான கட்சியே பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஒரு 10 வாகனகளில் 30 பேர் மட்டுமே செல்வோம் என்று நீதிமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்து விட்டு இன்று அதற்கு மாறாக அதிக அளவிலேயே போய்விட்டதாகவும், நடைமுறையில் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்வதாகவும் தமிழக பாஜக மீது தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் நேரம் முடிவடைந்தால் இந்த வழக்கை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நேற்று காங்கிரஸ் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் 3,000 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். அது தொடர்பாக தமிழக அரசு வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது தவறாக நடக்கும் ஒரு காரியத்தை நியாயப்படுத்தி உங்கள் வழக்கிற்காக ஆதாரமாக தேடாதீர்கள் என்று நீதிபதிகள் கண்டனத்தை பதிவு செய்ததுடன் வழக்கை மதியம் ஒத்தி வைத்து இருக்கிறார்கள். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும்.