பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என்று டிஜிபி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. 10 வாகனகளில் 30 பேர் மட்டுமே செல்வோம் என்று பாஜகவினர் நீதிமன்றத்தில் கூறியதை பின்பற்றவில்லை என்றும் டிஜிபி தரப்பு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சொல்வது ஒன்றாகவும், நிஜத்தில் கடைபிடிப்பதும் வெவ்வேறாக உள்ளன என டிஜேபி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் உட்பட கட்சியினர் யாரும் முறையாக முகக்கவசம் அணிய வில்லை என்றும் டிஜிபி தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Categories
‘கோயில் யாத்திரை அல்ல: அரசியல் யாத்திரையே” தமிழக டிஜிபி தரப்பில் வாதம் ..!!
