கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் கௌரவ பேராசிரியர் தன் குடும்பத்தை நடத்துவதற்கு ஆடுகள் மேய்த்து வருகிறார்.
ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவ துர்கா புறநகர் பகுதியில் வீரநாககவுடா என்பவர் வசித்துவருகிறார். அவர் மஸ்கி டவுனில் இருக்கின்ற அரசு கல்லூரி ஒன்றில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
அதனால் அவர் வேலை செய்து வந்த அரசு கல்லூரியின் மூடப்பட்டது. அவர் 7 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. அதுமட்டுமன்றி அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் குடும்பத்தை நடத்துவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப கஷ்டத்தை நினைத்து தற்போது 20 க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து தனது குடும்பத்தை நடத்தி வருகின்றார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காரணமாக எனக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வரவில்லை. அதனால் என் குடும்பத்தை நடத்துவதற்கு வேறு வழி இல்லாமல் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கிறேன். அதன் மூலம் தினமும் எனக்கு இரண்டு ரூபாய் வருமானம் வருகிறது. என்னைப் போன்ற சம்பளம் கிடைக்காமல் ஏராளமான பேராசிரியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். எங்கள் துயரத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.