Categories
மாநில செய்திகள்

கிரிக்கெட் ஜாம்பவான்களை திணற வைத்த நடராஜன்… சேலத்திற்கு மிகப்பெரிய பெருமை… முதலமைச்சர் வாழ்த்து…!!!

இந்திய அணியில் தேர்வாகியுள்ள சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக அனைவரையும் அவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார். டிவில்லியர்ஸ் மற்றும் தோனி உள்ளிட்ட கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை திணற வைத்துள்ளார்.

அப்படிப்பட்ட நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை எல்லாம் தமது அசாத்திய பந்துவீச்சால் திணற வைத்த நடராஜன், தற்போது இந்திய அணிக்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |