Categories
உலக செய்திகள்

தொழிற்சாலை ஊழியரின்…. பால் தொட்டியில் குளு குளு குளியல்…. வெளியான சர்ச்சை வீடியோ…!!

ஊழியர் ஒருவர் தொழிற்சாலையில் உள்ள பால் தொட்டியில் குளித்த வீடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

துருக்கி நாட்டிலுள்ள கென்யா என்ற நகரில் பால் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதில் வேலை பார்த்து வரும் ஊழியரான எம்ரி சாயர் என்பவர் தொழிற்சாலையிலுள்ள தொட்டி முழுவதும்  பால் போன்ற ஒன்றை நிரப்பி அதில் மூழ்கி ஆனந்தமாக குளித்துள்ளார். இதை இன்னொரு ஊழியர் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த விடியோவை பார்த்த பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அந்த தொழிற்சாலையை மூடும் படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அச்சம்பவம் குறித்து அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “அந்த ஊழியர் நிஜமாகவே பால் நிரம்பிய தொட்டியில் குளிக்கவில்லை. தண்ணீர் மற்றும் பாய்லர்களை சுத்தப்படுத்தும் திரவம் கலந்து நிரப்பப்பட்ட தொட்டியில் தான் அவர் குளித்துள்ளார். மேலும் அந்த நபரை தற்போது வேலையில் இருந்து நீக்கிவிட்டோம்” என்று கூறியுள்ளது. இருப்பினும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிற்சாலையை மூடவும், அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |