Categories
சினிமா தமிழ் சினிமா

15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ….

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதை அடுத்து திருச்சியில் உள்ள 15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கள் தமிழகம் முழுவதும் கடந்த 7 மாதங்களுக்கும் மேல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50 சதவிகித இறக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி திருச்சியில் உள்ள 15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திரைப்படங்கள் வெளியாவது குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்பதால் எ வெற்றி பெற்ற பழைய படங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |