திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நில பட்டா மாற்றுவது தொடர்பாக லஞ்சம் வாங்கிய வி. ஏ .ஓ கைதானார்.
சென்னை மேடவாக்கப் பகுதியை சேர்ந்தவர் கபாலி . இவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றுவதற்கு, அதியனூர் கிராம நிர்வாக அலுவலரான அப்பாசாமியை தொடர்பு கொண்டுள்ளார் . அதற்காக அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஏற்கனவே 8500 ரூபாயைக் கொடுத்துள்ளார் கபாலி. இந்நிலையில் மீதமுள்ள 1500 ரூபாயை, அப்பாசாமி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.