Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியின் கள்ளக்காதல்….. இடையூறாக இருந்த கணவன்….. காதலனுடன் போட்டு தள்ளிய கொடூரம்…..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலிருக்கும் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்காளை-கலையரசி தம்பதியினர். 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து தம்பதியினருக்கு ஹரிஷ் குமார், கிஷோர் கிஷோர் குமார் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் கட்டட வேலை செய்துவரும் நிலையில் மேலபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. மனைவியின் திருமணம் மீறிய உறவு குறித்து முத்துகாளைக்கு தெரியவந்ததால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஒரு மாதத்திற்கு முன்பு தனது மனைவியின் வீட்டிற்கு குடும்பத்துடன் முத்துகாளை சென்றுள்ளார்.

இந்நிலையில் மூன்றாம் தேதி தான் ஊருக்கு வருவதாக தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு முத்துகாளை தகவல் கொடுத்துள்ளார். ஆனால் இரண்டு தினங்களாக அவர் ஊர் பக்கம் போகவில்லை இதனால் ஈஸ்வரன் கலையரசியை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே சனிக்கிழமை அன்று அழுகிய நிலையில் முத்துகாளையின் சடலம் கமாட்சிபுரம் தனியார் கிணற்றில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஈஸ்வரன் தனது அண்ணி கலையரசி மீது சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார்.

கலையரசியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் யாரும் இல்லாத பகுதிக்கு முத்துகாளையை அழைத்துச் சென்று தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கலையரசியையும் அவருக்கு உடந்தையாக இருந்த காதலன் சேதுபதியையும் கைது செய்த காவல்துறையினர் சேதுபதியின் நண்பர் கணேசனை தேடி வருகின்றனர்.

Categories

Tech |