Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனிப்புக்கு இனிப்பு சேர்க்கும் வகையில்… கேரட் பாயசம்…!!!

கேரட் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:

கேரட்                                        – கால் கப்
வெள்ளம்                                – கால் கப்
தண்ணீர்                                  – தேவையான அளவு
தேங்காய் பால்                    – 1 கப்
ஏலக்காய் தூள்                    – அரை டீஸ்பூன்
உப்பு                                          – 1 சிட்டிகை
நெய்                                          – 2 டீஸ்பூன்
முந்திரி                                    – 10
திராட்சை                                – 5

செய்முறை:

முதலில் கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சிஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.   அடுப்பில் கடாயை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில், வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும் .

பிறகு, அதில் அரைத்த கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

இறுதியில், வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கொதிக்கிற கலவையில் சேர்த்து கலக்கி இறக்கினால் சுவையான கேரட் பாயாசம் ரெடி.

Categories

Tech |