தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடந்த வருடம் இ-பாக்ஸ் நிறுவனம் மூலமாக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வருடம் அதே நிறுவனம் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை வழங்க முடிவு செய்துள்ளது.
அதில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகள் 14,975 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன் பிறகு அதற்கான பயிற்சி வகுப்புகள் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர் எண்ணிக்கை அதிக அளவு இருந்ததால் அது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.