Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி வைத்து செல்ஃபி… இளைஞனின் வீபரீத ஆசை… உயிரே பறிபோன சோகம் …!!

வாலிபர் ஒருவர் விளையாட்டாக செல்பி எடுத்த பொது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் செல்பி எடுத்த பொது கையில் இருந்த துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதால் குண்டானது மார்பில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். மரணமடைந்த வாலிபர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் வேறு ஒரு நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்ற போது, துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அவருடைய நண்பர் நகுல் சர்மா ஷ்ர்தா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மரணமடைந்த வாலிபர் தாரம்புரா கிராமத்தை சேர்ந்த சவுரப் மாவி என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் வாலிபரின் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |