Categories
உலக செய்திகள்

கெத்து காட்டும் இந்தியர்கள்… 5 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை… ஜோ பைடன் எடுத்த முதல் முடிவு …!!

ஜோ பிடன் தலைமையிலான ஆட்சி 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்று ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். ஆட்சியில் அமர்ந்தவுடன் ஜோ பைடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றவர்களுக்கு குடியுரிமை அளிப்பதில் தான் முதல் கையெழுத்து போடுவார் என பலரும் கருதுகின்றனர். இதன்படி  ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் இந்தியர்கள் 5 லட்சம் பேர் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதன் மூலம் வருடந்தோறும் 95000 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் அமெரிக்க குடிமக்களாக மாற்ற படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா வல்லரசு நாடாக மாற்றியதில் பெரும்பங்கு மற்ற நாடுகளிலிருந்து தஞ்சம் அடைந்தவர்களுக்கு உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி அமைந்தால் நிறைவேற்றப்படும் என சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. அதன்படி நாடாளுமன்றத்தின் உதவியுடன் குடியேற்ற சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு நவீனமயமாக்கப்படும்.

ஆவணங்கள் இல்லாத 1.10 கோடி பேருக்கு குடியுரிமை வழங்கப்படும். அதில் 5 லட்சம்பேர் இந்தியர்களாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு பணிபுரிய வருபவர்களுக்கு எச்1பி விசா வழங்குவதும், சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிவதற்கு கிரீன் கார்டு போன்றவை வழங்கப்படும், ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு விதித்த தடை உத்தரவு பதவியேற்ற முதல் நாளே நீக்கப்படும், எல்லைப் பகுதியில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படும் என கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |