மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ்-ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இதுவரை குழந்தை இல்லை. ருக்மணி மிகுந்த அழகுடன் இருந்ததால் அவரது கணவர் தங்கராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இந்நிலையில் மதுபோதையில் நேற்று முன்தினம் தங்கராஜ் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர்.
சிறிது நேரத்தில் கண் விழித்த தங்கராஜ் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்து அவரது தலையில் கல்லை போட்டு கொன்றார். அதன் பிறகு காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ருக்மணியின் சடலத்தை கைப்பற்றி தங்கமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.