Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி வைத்து மாஸ் செல்பி…. திடீரென நடந்த விபரீதம்…. பறிபோன உயிர்…!!

ஓடிக் கொண்டிருந்த காரில் செல்பி எடுக்க முயற்சித்த போது துப்பாக்கி சுட்டுக் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் சேர்ந்தவர் சவுரப். இவர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் திருமண விழாவிற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கியை வைத்துக்கொண்டு செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். கார் வேகமாக சென்று கொண்டிருந்ததால் தவறுதலாக துப்பாக்கியின் தோட்டா வெளிவந்து சவுரப் மார்பில்  பாய்ந்தது.

இதனால் சவுரப்பை அவரது நண்பர் நகுல் சர்மா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விளையாட்டாக செல்பி எடுக்கும் முயற்சியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |