Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வு பயத்தால்…. மருத்துவம் படிக்கும் மாணவி…. தூக்கிட்டு தற்கொலை…!!

எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் பெரம்பூரில் உள்ள வாஞ்சிநாதன் தெருவில் வசிக்கும் தம்பதியினர் சீனிவாசன்-வசந்தா. இவர்களுடைய மகள் சீசா(22). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வந்துள்ளார். எனவே சீசா மதகடிப்பட்டு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் தாயாருடன் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சீசா, சம்பவத்தன்று வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்று தூங்கியுள்ளார். ஆனால் காலையில் வெகு நேரமாகியும் சீசா வெளியே வராததால் வசந்தா சந்தேகத்தில் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது சீசா மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய்  கதறி அழுதுள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் சீசாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில் மாணவி, அதிக பாடங்களை படிக்க வேண்டியது  இருந்ததாலும், தேர்வு பயத்தாலும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |