Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனுக்காக சென்ற பெண்…. அப்போது நடந்த துயரம்…. குடும்பத்தாருக்கு வந்த அதிர்ச்சி தகவல் …!!

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் பெண் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஐசிஎப்ல்  இருந்து அயனாவரம் செல்லும் ரோட்டில், கீழ்ப்பாக்கம் நோக்கி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக, பின்னால் வந்த மாநகர பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் கையிலிருந்த ஆவணங்களை வைத்து சோதனை செய்து பார்த்ததில், அவர் அதே பகுதியில் வசிக்கும் மிஸ்ஜா என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மிஸ்ஜாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பலியான மிஸ்ஜா தன்னுடைய கணவன் விபத்தில் சிக்கி கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுனர் சுந்தரராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |