Categories
மாநில செய்திகள்

பருவமழை பெய்ததால்…. சாலையோரம் வீசப்பட்ட தக்காளிகள்…. விவசாயிகள் கவலை…!!

பருவமழை பெய்தததில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தக்காளி பயிர் நடவு செய்துள்ளனர். இந்த தக்காளி செடிகள் நன்கு வளர்ந்து அதிகமாக காய்கள் பிடித்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாராபுரம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தக்காளி செடியில் இருந்த பழங்கள் மற்றும் காய்கள் அனைத்தும் அழுகிப்போனது. இதனால் விவசாயிகள் அழுகிய பழங்களை செடியில் இருந்து பறித்து சாலை ஓரங்களிலும், தெருவோரங்களிலும் கொட்டி வருகின்றனர்.

இதையடுத்து தாராபுரம் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டே வருவதால் தக்காளி செடியில் உள்ள பழங்களுக்கு பாதிப்பு அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளதால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அழுகல் நோய் காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. எனவே தற்போது சந்தையில் ஒரு கிலோ ரூ.10 க்கு விற்கப்படும் தக்காளி அடுத்து வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்று அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |