ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிறையிலுள்ள 55 பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி மேக தொட்டி சுசரிதா கூறுகையில், “இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. ஆந்திர மாநிலத்தில் 147 பெண் கைதிகள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் 5 ஆண்டுகளில் சிறையில் இருந்து 55 பேர் விடுதலை செய்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த வாரம் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். சிறையில் உள்ள பெரும்பாலான ஆயுள் குற்றவாளிகள் குற்றச்செயலில் அதிகம் பங்கு இல்லாதவர்கள். அவர்கள் அனைவரும் சூழ்நிலைக்கு பலியானவர்கள். இந்தக் குற்றத்தை மீண்டும் அவர்கள் செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. நம் முதல்-மந்திரி பெண்கள் மீது கருணை கொண்டவர். அவர் எடுத்துள்ள இந்த வரலாற்று முடிவால் மீண்டும் அதை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பெண்களை சிறையில் இருந்து விடுவிப்பது சமூகத்திற்கு பயனளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.