Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் முதன்முறையாக நோயாளிகளுக்கு பேட்டரி கார் வசதி “

நோயாளிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக பேட்டரி பொருத்தப்பட்ட கார் வசதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவ கல்லூரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1கிமீ வரை நடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது வெயில் காலம் என்பதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிற நிலையில், பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்பவர்கள் மயங்கி விழுவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியபடுத்தியதையடுத்து  நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் களுக்காக இலவச பேட்டரி பொருத்தப்பட்ட கார் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது

Categories

Tech |