ஜோ பைடன் அமெரிக்க தேர்தலில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஆக இருந்தாலும் எதிரிகள் கிடையாது என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் நிலையில், வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார் ஜோ பைடன். ஆனால் அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக கூறி வருகிறார்.
இவ்வாறு இருவரும் மறைமுகமாக மோதி வரும் நிலையில் டுவிட்டரில் பதிவுகள் மூலம் ஜோ பைடன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் நாம் எதிர் எதிர் கட்சியாக இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது என்றும் நாம் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியல் நோக்கம் முற்றிலும் போர் கிடையாது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.