கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 2,601 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோடு நகரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. அங்கு விமானத்தில் இருந்து கிராமிய 5 பயணிகளிடம் வெவ்வேறு சம்பவங்களில் இருந்து 2,601 கிராம் அளவு தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைப் போன்றே 6 பயணிகளிடம் இருந்து 59 ஆயிரம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்துள்ளனர்.
இதனைப் போலவே கண்ணூர் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் 624 கிராம் தங்கம். அந்த நபர் அந்த தங்கத்தை ஆசனவாய்ப் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நாட்டிலேயே கல்வியறிவில் பிற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருந்த கேரள மாநிலம், தற்போது கடத்தல் தொழிலில் முன்னிலை வகித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.