சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. அதேபோல நாளை அதிகாலையும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், அடையாறு, அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் மழை தொடர கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களை பொருத்தவரைக்கும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஒரு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. வங்க கடலில் எந்த ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவரைக்கும் உருவாகவில்லை. ஆனால் நவம்பர் மாத பிற்பகுதியில்…. பதினைந்தாம் தேதிக்கு மேல் உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்களுக்கு தற்போது எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.