நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவரின் வீட்டின் முன் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இன்று காலையில் அவரின் வீட்டின் முன்பு ஒன்றுகூடினர். கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றபடி தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து உள்ளார். அவரைக் கண்டவுடன் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி முழங்கினர். அவரின் வாழ்த்துக்களை கைகூப்பி ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் தனது நன்றியை அவர்களுக்கு தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சமூக வலைதளம் மூலமாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல், சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அதனால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.