ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.