அதிமுக சூப்பரா மக்கள் பணி செய்கிறது என்றுன்னு சொல்ல மாட்டேன் என பிரேமலதா கூறியது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தேமுதிக கட்சி பொருளாளர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, வேல் யாத்திரையால் அரசாங்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று செய்தி வந்திருக்கிறது. அதனால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கிறார்கள். தடையை மீறி ஊர்வலத்தை நடத்தும் போது அரசாங்கம் அதன் கடமையைச் செய்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும், எந்த நிகழ்ச்சி வேண்டுமானாலும் பண்ணலாம். நான் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் சிறப்பான முறையில் செய்தால் நாங்கள் வரவேற்கின்றோம்.
மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கின்றதா என்று நாம் இப்பவே சொல்ல முடியாது. இன்னும் எந்த கட்சியின் தேர்தலுக்கான பணிகள் நடக்கவில்லை. டிசம்பர் ஜனவரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு – பொதுக்குழு கேப்டன் தலைமையில் நடைபெறும். அப்போது அத்தனை நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்து கேப்டன் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார். ஆனால் இன்று வரைக்கும் நாங்கள் இருக்கின்ற அதிமுக கூட்டணியில் தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களின் மனங்களை திமுக தான் ஆளுகின்றது என ஸ்டாலின் சொல்லுவாரு. உண்மையிலே ஆளுகின்றதா இல்லையா என்பதை மக்கள் தான் கேட்கவேண்டும். அதிமுக ஆட்சியை நிறையும், குறையும் கலந்த ஒரு ஆட்சியாக தான் பார்க்கின்றோம். சுத்தமாக ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சொல்ல முடியாது. மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்தார்கள். இன்றைக்கு மதுரை நகரம் முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கின்றது. ஸ்மார்ட் சிட்டி செய்கின்றோம் என்று இருக்கின்ற சிட்டியை பாழாக்கி கொண்டிருக்கின்றார்கள், இது கண்டனத்துக்குரியது. வரக்கூடிய தேர்தலில் ஆட்சியில் பங்கு இருப்பீர்களா என்ற கேள்விக்குஇப்போதைக்கு நாம் ஏதும் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக ஒன்று மட்டும் உறுதியாக சொல்கின்றேன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது ,இது உறுதி என பிரேமலதா தெரிவித்தார்.