Categories
தேசிய செய்திகள்

மக்கள் நலனே முக்கியம்… தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது… முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 16ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிப்பது பற்றி அம்மாநில அரசு பரிசீலனை செய்து வந்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் காற்று மாசு ஏற்பட்டால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதிப்படைவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பட்டாசு பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தற்காலிக தடை விதிப்பது குறித்து தனது தீர்ப்பினை தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளிவைத்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பட்டாசுக்கு தடை விதிப்பதற்கு அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |