பெரு நாட்டில் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களைப்போலவே பெண்கள் வேட்டையாளர்கள் என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது
பண்டைய காலங்களில் வேட்டைக்காரர் களைப் போன்று நாம் தொடர்பு படுத்தி பேசுவது ஆண்களை மட்டும் தான். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய கண்டுபிடிப்பில், பெண்கள் வேட்டையாடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரு நாட்டில் 107 தளங்களில் புதைக்கப்பட்ட 427 நபர்களின் எழும்புக்கூடுகள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அந்த புதைகுழிகளில் 27 பேர் வேட்டை உபகரணங்களுடன் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அதில் 11 பேர் பெண்கள்.
இந்த ஆய்வு பெண்கள் வேட்டையாடுவதற்கு போதுமான ஆதாரங்களை அளித்துள்ளது. பெரு நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு, 17 முதல் 19 வயதுடைய ஒரு பெண்ணின் எலும்புகள், கல்லெறி பொருள் மற்றும் கத்தி போன்ற ஒரு கலைப் பொருள் மற்றும் ஒரு மிருகத்தை வெட்டுவதற்கும் அதனை துடைப்பதற்கு உள்ள பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய டைம்ஸ் கூறியுள்ளது. அந்தப் பெண்ணின் எலும்புகள் அவர் இறைச்சி சாப்பிடுவதை உறுதி செய்துள்ளன.
இதுபற்றி கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “எங்கள் கண்டுப்பிடிப்புகள் பண்டைய வேட்டைக்காரர்கள் குழுவின் மிக அடிப்படையான நிறுவன கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. பண்டைய வரலாறு மற்றும் சமகால வேட்டைக்காரர்களுக்கு மத்தியில், ஆண்கள் வேட்டைக்காரர்கள் என்றும் பெண்கள் சேகரிப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் எங்கள் கண்டுபிடிப்பில் தொல்பொருள் உண்மையான பெண் வேட்டையாடுவதை சுட்டிக்காட்டும் வலுவான ஆதாரமாக இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.