Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி..!! இதை மட்டும் பண்ணுங்க…. ஐயப்பன் பிரசாதம் வீடு தேடி வரும்….!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீட்டிற்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் மண்டல பூஜை மற்றும்  மகரவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதோடு தரிசனம் முடித்து அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்களை அனைவரும் வீட்டிற்கு வாங்கி செல்வார்கள்.

இந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 1000 பக்தர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்களும் மகரவிளக்கு பூஜை மண்டல பூஜை ஆகியவற்றிற்கு 5000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜையில் பங்கேற்பதற்கு 85,000 பேர் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பல மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்பன் பக்தர்கள் கோவில் பிரசாதத்தை வீட்டிலேயே இருந்துகொண்டு பெற்றுக் கொள்ளும் விதமாக தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மூலமாக இந்த மாதம் 16ம் தேதி முதல் வீடுகளுக்கே பிரசாதங்களை கொண்டு செல்வதற்க்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு அபிஷேகம் செய்த நெய், அப்பம், விபூதி, அரவணை, குங்குமம், களபம் போன்றவை அடங்கிய கிட் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கான முன்பதிவை கேரள இந்து அறநிலையத்துறை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தபால் துறையின் மூத்த அதிகாரிகள் தேவசம் போர்டின் உயரதிகாரிகள் போன்ற பலர் கலந்து கொண்டனர். பிரசாத கிட் ஒன்றுக்கு 400 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தபால் நிலையம் மூலமாக இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |