Categories
தேசிய செய்திகள்

டேய் நான் சரக்கடிக்கணும்…. “சைட் டிஷ் வாங்கிட்டு வா” மறுத்த சிறுவனுக்கு…. நேர்ந்த பயங்கரம்…!!

மது அருந்த சைட் டிஷ் வாங்கி தர மறுத்த சிறுவனை குடிகார நபர் அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

டெல்லியை சேர்ந்தவர் ஷாதாப்(20). இவர் சம்பவத்தன்று சாலையோரம் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 14 வயது சிறுவன் ஒருவனை கூப்பிட்டு குடிப்பதற்கு சைட் டிஷ் வைத்திருக்கிறாயா? எனக்கு தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறான். இதையடுத்து மது போதையில் இருந்த அந்த நபர் சிறுவனிடம் எனக்கு கடைக்கு சென்று சைட்டிஷ் வாங்கிவிட்டு வா என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த சிறுவன் என்னால் வாங்கி வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஷாதாப் அச்சிறுவனிடம் வம்பிழுத்ததால் சிறுவன் சைட் டிஷ் வாங்கி தர முடியாது என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த அந்த குடிகார நபர் சிறுவனை தாக்கி மண்டையை உடைத்ததால் அவர் மயங்கி விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதில் அதிக அளவில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் சிறுவனைப் பார்த்து உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனை கொலை செய்த அந்த குடிகார வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |