Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரைக்கு ஏன் தடை….? விளக்கம் கொடுங்க…. அரசை கேள்வி கேட்ட பிரேமலதா…!!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையிலிருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை சென்ற   தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சட்டம் ஒழுங்கிர்க்கும் மக்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் தனது கடமையை அரசாங்கம் சரியாக செய்யும் எனக் கூறினார்.

அதேநேரம் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதித்தது குறித்து உரிய விளக்கத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தேமுதிகவின் செயற்குழுக் கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கூட்டப்பட்டு கூட்டணி தொடர்பான முடிவை விஜயகாந்த் அவர்கள் தெரிவிப்பார் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |