நேபாள ராணுவத்தின் ராணுவ தளபதி என்ற பட்டத்துடன், ஒரு வால் மற்றும் பட்டச்சுருள் இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனேக்கு வழங்கப்பட்டது.
நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் சீனாவின் முயற்சிக்கு அணை போட கூடிய வகையிலும், இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான விரிசலை சரி செய்யும் வகையிலும், இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனே மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ளார். அங்கு தலைமை காத்மாண்டுவில் ஜனாதிபதி மாளிகை ‘ஷீத்தல் நிவாசில்’ நேற்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது நேபாள ராணுவத்தில் கௌரவ தளபதி என்ற பட்டத்தை நரவனேக்கு ஜனாதிபதி வித்யா தேவி வழங்கி சிறப்பித்தார். அதனுடன் சேர்த்து ஒரு வால் மற்றும் பட்டச்சுருள் அவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக நரவனே, நேபாள இராணுவத்தின் தலைமை தளபதி பூர்ண சந்திர என்பவரை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது பற்றிய விவாதம் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் மேம்பால பாதுகாப்புத் துறையை கவனித்து வரும் பிரதமர் சர்மா ஒளியை சந்தித்து நேரில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.