Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரைக்கு தடை…. இந்துக்கள் கிள்ளுகீரைகளா….? ஆதங்கத்தில் பாஜக…!!

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததால் இந்துக்கள் கிள்ளுகீரைகளா என பாஜக இளைஞரணி தலைவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாஜக சார்பாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை வேல் யாத்திரை மேற் கொள்ளப்பட இருந்தது. இந்த யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு உறுதியாக வேல் யாத்திரைக்கு தடை விதிப்பதாக விளக்கத்துடன் கூறியது.

இந்நிலையில் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ், “இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று கூறிய திருமாவளவன் போராட்டம் நடத்துவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும் அனுமதி உண்டு. ஆனால் இந்துக்களை இழிவுபடுத்தும் செயலை கண்டிக்கும் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை. இந்துக்கள் என்ன கிள்ளுக்கீரையா?” என தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |