Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 100பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – பீகாரில் சோகம்

பீகாரில் பாகல்பூரின் நாவூகாச்சியாவில் பகுதியில் வியாழக்கிழமை காலை படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளனர். மோசமான நிலையில் இருந்த படகில் 100 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. படகு கங்கா நதியைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படகு விபத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகவும்,  மீதம் உள்ள மக்கள் தங்களைக் காப்பாற்ற மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் ஆற்றின் கரையோரம் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

 

Categories

Tech |