டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருக்கின்ற தமிழக அரசின் புதிய இடத்திற்குச் சென்று அடைந்தார். அங்கிருந்த திட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அதன் பிறகு மாலை 4 மணி அளவில் பிரதமரை சந்திப்பதற்கு அவர் இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக அரசியல் சூழல் பற்றியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் கூறினார். அதன் பிறகு தமிழக அரசு இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார். அந்த சந்திப்பிற்கு பின்னர் தமிழக கவர்னர் நாளை சென்னை திரும்புவார்.