புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் அதிமுக எம்.பி கோகுல கிருஷ்ணன் பேசிய போது தனது முகக்கவசத்தை தலையில் அணிந்துள்ளார்.
புதுச்சேரியில் ரூ.3.17கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ள லாஸ் பேட்டை காவல் நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா ஈசி.ஆர். சாலையில் நடைபெற்றது.இந்த விழாவில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, எம்.பி.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன் மேடையில் பேசும்போது தனது முகக் கவசத்தை தலையில் அணிந்துள்ளார்.
இதைக் கண்டவர்கள் எம்.பி. கோகுலகிருஷ்ணன் நூதனமாக சிந்திப்பதாக கூறியுள்ளனர் . நிகழ்ச்சியில் பேசிய எம்.பி. கோகுலகிருஷ்ணன் புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததற்கு புதுச்சேரி காவல் துறையினர் மத்திய பாஜக அரசிடம் இருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும்முதலமைச்சர் நாராயணசாமி கஞ்சா மற்றும் போலி லாட்டரியை தடை செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .