Categories
மாநில செய்திகள்

‘புதிய முதலீட்டில் தமிழகம் தான் முதலிடம்’… மிக பெரிய முன்னேற்றம்… கேர் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கை…!!!

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் புதிய முதலீடுகளை பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கேர் ரேட்டிங்ஸ் அமைப்பு கூறியுள்ளது.

செப்டம்பர் மாதத்துடன் முதல் அரையாண்டு முடிவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் புதிய முதலீடுகளை பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இதுபற்றி கேர்ரேட்டிங்க்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கை கூறுவது, ” இந்த வருடத்தின் முதல் அரையாண்டில் இந்தியாவின் செய்யப்பட்ட புதிய முதலீடுகளில் தமிழகம் 16 சதவீதத்தை ஈர்த்திருக்கிறது. 11% முதலீடுகளைப் பெற்று ஆந்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 7% முதலீடுகளைப் பெற்று ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தது. 2020 மற்றும் 2021 முதல் அரையாண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட புதிய முதலீடுகளின் மொத்த அளவு சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 69 சதவீதம் குறைந்து 1.5 லட்சம் கோடியாக சரிந்திருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் முதலீடுகள் 60 கோடியாக குறைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |