அமெரிக்காவில், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பாக மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இதையடுத்து நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி (உள்ளூர் நேரம் இரவு) ஜோ பைடன் 129 வாக்குகளுடன் முன்னிலைலையிலும், டிரம்ப் 108 வாக்குகளுடன் சற்று பின்தங்கியியும் இருந்தார்கள். இந்நிலையில் வாக்கு முடிவுகளை அறிந்துகொள்வதில் அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் தொலைக்காட்சி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் தேர்தல் முடிவுகளை பார்த்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை எது என்று பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
அமெரிக்காவில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆதரவாளர்கள் தங்களுடைய வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். எனவே மதுபானங்களை வாங்கி தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக “என் அருகில் உள்ள மதுக்கடைகள் ( ‘Liquor stores near me’)” என்று கூகுளில் தேடி வருவதால் இன்று முதல் இடத்தில் இந்த வார்த்தை இருப்பதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.