Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் திருமணம்….? தொழிலதிபர் மாப்பிள்ளையா…? விளக்கமளித்த லாஸ்லியா….!!

தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு நடிகை லாஸ்லியா விளக்கம் அளித்துள்ளார்.

 

லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவானார்கள். பிக்பாஸுக்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் அவர் தற்போது பிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனா உடனும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே நடிகை லாஸ்லியாவிற்கும் கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றது. இந்நிலையில்,அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த லாஸ்லியா “இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை அது வெறும் வதந்தி தான்” எனக் கூறியுள்ளார்.

 

Categories

Tech |