பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் ஆக முடியாது என்று லோக் ஜன சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி உள்ளது. அந்த தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தத் தேர்தலில் வாக்களிக்க சென்ற லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், ” நிதீஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வராக ஒருபோதும் வர முடியாது.
மக்கள் அனைவரும் அவரை நிராகரித்து விட்டார்கள். முதல் கட்ட தேர்தல் முடிந்த பின்னரும் அவரின் முகத்தில் அச்சத்தை காண முடிகிறது. நிதீஷ் குமாருக்கு வாக்களித்த மக்கள் எவரும் வாக்குகளை வீணாக்க வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.