இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மூழ்கி கிடப்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோ அமைந்துள்ளது.
மனிதனின் 6வது விரலாக கருதப்படும் செல்போன் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இது கையில் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மூழ்கி விடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை காண்பது அரிதாகவே உள்ளது. சொல்ல போனால் இது செல்போன் யுகம் என்று கூட சொல்லலாம். இதனால் பல நன்மைகளும் இருக்கிறது, அதுபோல தீமைகளும் இருக்கிறது.
தற்போது சின்ன குழந்தைகள் கூட தங்கள் கைகளில் வைத்து கொண்டு அவர்களுக்கு பிடித்ததை பார்க்கிறார்கள். அவர்கள் அழும் போது கையில் செல்போனை கொடுத்தால் போதும் அழுகை நின்று விடும். இதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக, குழந்தைக்கு ஒருவர் மொட்டையிடுகிறார். அதை பொருட்படுத்தாமல் தன் கையில் செல்போனை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவை பல மில்லியன் நெட்டிசன்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
வீடியோ கீழே:
மொபைல்ல மூழ்கிட்டா நம்மள ஒருத்தன் மொட்டை அடிச்சாகூட தெரியாது https://t.co/12IQ28ey3Y via @Facebook
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) November 3, 2020