வெப்பநாடுகளில் வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இளநீர் .
கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுக்காக்கவும் , உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை நிறைந்து உள்ளன.
வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்குகிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் சிறந்த மருந்தாகும்.
சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது.இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது.இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது.சிறந்த சிறுநீர் பெருக்கி.சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு இது உதவுகின்றது.