மர்ம நபர்கள் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலையடுத்து ஆஸ்திரிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் மற்றொருவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார் என்று ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவரின் இடுப்பில் வெடிக்கும் பெல்ட் அணிந்திருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் குறித்து ஆஸ்திரிய மக்களுக்கு ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளன. மேலும் “இது ஒரு தீவிரவாத தாக்குதல் தான்” என சான்சிலர் கூறியுள்ளார். இந்நிலையில் வியட்நாமில் தாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம் என தீவிரவாதிகள் தகவல் வெளியிட்டுள்ளதாக SITE புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் நிலையில் ஆஸ்திரியா அமெரிக்காவுடன் கூட்டணியில் உள்ளது. ஆகையால் அதற்கு பதிலடி கொடுப்பதற்காக வியாட்நாமில் தாக்குதல் நடத்தினோம் என்று தீவிரவாதிகள் குழு தெரிவித்திருக்கிறது.