Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு… இது மிகவும் ஆபத்து… மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!!

கொரோனா இரண்டாவது அலை வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது மிகவும் ஆபத்தானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நவம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை செய்து இது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

நவம்பர் மாதத்திற்கு பதிலாக வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் அப்போது உள்ள சூழ்நிலையைப் பொருத்து ஆய்வு செய்து பள்ளிகளை திறக்க முடிவு செய்ய வேண்டும். கொரோனா இரண்டாவது அலை தொடங்கும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பது கண்டனத்திற்கு உரியது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |